போபால்:
ஊராட்சித் தலைவர் வீட்டு முன்பு, பைக் ஓட்டி விட்டதாகக் கூறி, தலித் இளைஞரைத் தாக்கிய சம்பவம் நடந்துள்ளது.மத்தியப்பிரதேச மாநிலம், போபால் அருகே உள்ள பண்டெல்காந்த் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் தயாராம் அகிர்வார் (30). தலித் இளைஞரான இவர், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக, அந்த கிராமத்தின் ஊராட்சித் தலைவர் ஹேந்த் குர்மி வீட்டின் முன்பு, இருசக்கர வாகனத்தில் சென்று விட்டாராம்.இதற்காக, அவரின் தலைமுடியைப் பிடித்து இழுத்து வந்து வீட்டிற்குள் வைத்து ஹேந்த் குர்மியும் அவருடைய சகோதரர்களும் சேர்ந்து கடுமையாக தாக்கியுள்ளனர். ஹேந்த் குர்மியின் சகோதரர் ஒருவர் துப்பாக்கியை வைத்து ‘இனிமேல் இவ்வாறு வேகமாக ஒட்டினால் சுட்டுக்கொன்று விடுவேன்’ என்றும் தயாராமை மிரட்டியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட தயாராம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும், அந்த புகாரைக்கூட போலீசார் வாங்க மறுத்துள்ளனர். ஆனால், தயாராம் அகிர்வார் தாக்கப்பட்ட கொடுமையை, யாரோ ஒருவர் வீடியோவில் எடுத்து பரவ விட்டதால், தற்போது வேறு வழியின்றி ஹேந்த் குர்மி மற்றும் அவரது சகோதரர்களான வினோத், முன்னு மற்றும் அனிருத்தா ஆகியோர் மீது எஸ்சி- எஸ்டி வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.