வழக்கறிஞர் தோழர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
நமது கட்சியின் அடுத்த வெற்றி
வழக்கறிஞர் ஷாஜி செல்லன் தகவல் 

ஸ்டெர்லைட் படுகொலைகள் குறித்து விசாரிப்பதற்காக நீதிபதி திருமதி அருணா ஜெகதீசனை ஒருநபர் விசாரணை கமிஷனாக தமிழக அரசு நியமனம் செய்திருந்தது. அந்த ஆணையம் வெளியிட்டிருந்த அறிவிப்பில், 22-05-2018 – ம் தேதி மட்டும் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் குறித்து “நேரடியாக அறிந்தவர்களும் நேரடித் தொடர்பு உடையவர்களும்” சாட்சியம் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிபந்தனை விசாரணை ஆணைய விதிகளுக்கு புறம்பானது என்றும் எனவே இந்த அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் தோழர் அர்ஜுனன் அவர்கள் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்து அவ்வழக்கு அரசின் பதிலுக்காக நிலுவையில் உள்ளது. இந்நிலையில், ஒருநபர் ஆணையம் இன்று தனது முந்தைய அறிவிப்பை திருத்தம் செய்து புது அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த புது அறிவிப்பில், சம்பவங்கள் குறித்து “நேரடியாகவோ மறைமுகமாகவோ தெரிந்தவர்கள்” மனு மூலமாகவோ அல்லது அபிடவிட் வடிவிலோ சாட்சியம் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்த வழக்கின் இன்னொரு வெற்றி. ஒருநபர் ஆணையம் தனது விதிமீறலை சரிசெய்தாலும், ஆணையம் அமைக்க அரசு பிறப்பித்த அரசாணையில் உள்ள தவறுகள் குறித்து நாம் எழுப்பிய வாதங்களும் நீதிமன்றத்தால் ஆமோதிக்கப்பட்டு அரசின் பதிலுக்காக நாளை மறுநாள் வாய்தா போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply