போபால்;
தவளைகளுக்கு திருமணம் செய்தால் மழை பெய்யும் என்ற மூடநம்பிக்கை செயல்கள் மத்தியப்பிரதேச மாநிலம் புந்தல்கண்ட் பகுதியில் இருப்பதும், அவர்களுக்கு மாநில பாஜக அமைச்சர் ஒருவர்தான் தலைமை என்பதும் தெரிய வந்துள்ளது.உத்தரப்பிரதேசம் மற்றும் மத்தியப்பிரதேசம் இடையில் உள்ள புந்தல்கண்ட் கிராமத்தில் கடுமையான வெயில் வாட்டியெடுப்பதாக கூறப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இவ்வாறு வெயில் கொளுத்தும்போது, மழை பெய்ய வேண்டும்; விவசாயம் செழிக்க வேண்டும் என்பதற்காக, தவளைகளுக்கு திருமணம் செய்வதை சிலர் நம்பிக்கையாக கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. அதாவது தவளைப் பொம்மைகளை வைத்து இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், அண்மையில் புந்தல்கண்ட் கிராமத்தில், குளக்கரையில் சிறிய பள்ளம் தோண்டி, அதில் தண்ணீர் நிரப்பி இரண்டு தவளைகளை விட்டுள்ளனர்; பின்னர் அங்கு சிறப்பு பூஜைகள் செய்தபின், தவளைகளுக்கு மஞ்சள் கயிறு கட்டி திருமணம் செய்து வைத்துள்ளனர்; பின்னர் 2 தவளைகளையும் அந்த குளத்தில் ஜோடியாக விட்டுள்ளனர்.
இந்த நிகழ்ச்சிக்கு தலைமை யாரென்றால் பாஜக அமைச்சர் லலிதா யாதவ். அவர்தான் தவளைத் திருமணத்தை நடத்தி வைத்துள்ளார்.சாதாரண மக்களிடையே இதுபோன்ற நம்பிக்கைகள் இருப்பது சஜகமானது. ஆனால், மாநில பாஜக அமைச்சர் ஒருவரே, இந்த நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்றிருப்பது வேட்கக் கேடாக மாறியுள்ளது. அமைச்சர் லலிதா யாதவ், நிகழ்ச்சியில் பங்கேற்றது மட்டுமல்லாமல், ‘மழை பெய்ய வேண்டும் என்று இறைவனை நாங்கள் வேண்டிக் கொண்டுள்ளோம்; தவளை திருமணம் செய்து வழிபட்டால் மழை வரும், விவசாயிகள் நன்மை பெறுவார்கள்’ என்று அரசியல் சாசனத்திற்கு எதிராகவும், மூடநம்பிக்கையை பரப்பும் வகையிலும் பேசியுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: