தன்வி சேத் என்கிற இந்துப் பெண்ணும் மொஹமத் சித்திக்கி என்கிற முஸ்லிமும் கலப்பு திருமணம் செய்து 11 ஆண்டுகளாக ஆகின்றன. தங்களின் பாஸ்போர்ட்டை புதுப்பிப்பதற்காக லக்னோவிலுள்ள பாஸ்போர்ட் அலுவலகத்திற்குச் சென்றனர். அங்கிருந்த அதிகாரி நீ முஸ்லிமைத் திருமணம் செய்த பின் தன்வி சேத் என்ற பெயருடன் எப்படி இருக்க முடியும் என்று கேட்ட அந்த அதிகாரி அவர்களைக் கேவலமாகப் பேசினார். இதனை வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மாவின் கவனத்திற்குக் கொண்டு சென்றனர் அந்த தம்பதியினர். சுஷ்மா இந்த விவாகாரத்தில் தலையிட்டு அவர்களுக்கு பாஸ்போர்ட் கிடைக்கச் செய்தார். இதற்குப் பிறகு வெளிநாடு சென்று திரும்பிய சுஷ்மாவிற்கு டிவிட்டரில் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.
அவரது கட்சியினரே சுஷ்மாவின் மீது கடும் அவதூறுப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். ஓரு சிறுநீரகத்துடன் வாழும் அவர் ஏற்கெனவே பாதிப் பிணம்தான் என்று தொடங்கி மிகவும் ஆவேசமாகவும் அருவருக்கத்தக்க வகையிலும் டிவிட்டரில் அவர் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்தியக் கலாச்சாரத்தை காக்க வந்த பிஜேபி அமைதி காக்கிறது. சுஷ்மாவுக்கு ஆதரவாக காங்கிரஸ் களத்தில் இறங்கியுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.