திருப்பூர்,
திருப்பூரில் குடியிருப்பு பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரி பொதுமக்கள் மற்றும் அனைத்து கட்சியினர் சார்பில் திங்களன்று மாவட்ட ஆட்சிய
ரிடம் மனு அளித்தனர்.

தமிழகத்தில் மாநில நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் டாஸ்மாக் கடைகள் அகற்றப்பட்டன. இந்நிலையில் மாநில நெடுஞ்சாலைகள் மாவட்ட சாலைகளாக மாற்றப்பட்டு, மீண்டும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு வருகிறது. இதில், குடியிருப்பு பகுதிகளில் கடை திறப்பதை பொதுமக்கள் தொடர்ந்து எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திருப்பூர் 32வது வார்டு மற்றும் சாமுண்டிபுரம் பகுதியை சேர்ந்த அனைத்து கட்சியினர் சார்பில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: திருப்பூர் சாமுண்டிபுரம் பகுதியில் உள்ள லட்சுமி நகர் தியேட்டர் சாலையிலும், பிச்சம்பாளையம், 32வது ஊத்துக்குளி பிரதான சாலை உள்ளிட்ட பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளது.

இதனால், மாணவர்கள் மற்றும் பனியன் கம்பெனிகளுக்கு வேலைக்கு சென்று இரவு வீடு திரும்பும் பெண்கள் சாலையில் செல்ல இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, குடியிருப்புகள் நிறைந்த பகுதிகளில் இருந்து டாஸ்மாக் கடைகளை அகற்ற வலியுறுத்தி சிபிஎம், சிபிஐ, திமுக உள்ளிட்ட அனைத்து கட்சியினர் தலைமையில் ஏராளமான பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் மனு அளித்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.