அமராவதி:
ஆந்திர மாநிலம் பாலகோல் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு இடத்தில் சுடுகாட்டை சீரமைக்க நிதி ஒதுக்கியும் தொழிலாளர்கள் அங்கு வேலை செய்ய முன்வரவில்லை; அங்கு பிசாசு உலாவதாக இருந்து வந்த மூடநம்பிக்கையும் பயமுமே அதற்குக் காரணம். இந்நிலையில், மக்களின் அச்சத்தைப் போக்குவதற்காக, அந்த தொகுதியின் எம்எல்ஏ நிம்மல ராம நாயுடு, இரவு முழுவதும் தனியாளாக சுடுகாட்டில் சாப்பிட்டு, தூங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார். அவரது செயலை கேரள முதல்வர் பினராயி விஜயன் உட்பட பலர் பாராட்டியுள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.