ஈரோடு,
காலமுறை ஊதியம் கோரி கிராம உதவியாளர்கள் ஈரோட்டில் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கம் சார்பில் கால முறை ஊதியம் வழங்க வலியுறுத்தி திங்களன்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பட்டை நாமம் போட்டு, பிச்சைஎடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.ராஜேந்திரன் தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் ஆர்.ராஜசேகர், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் கே.வெங்கிடு,கிராம சுகாதார செவிலியர்கள் சங்க மாநிலச் செயலாளர் வி.உஷாராணி, நெடுஞ்சாலைத்துறை கோட்டச் செயலாளர் அ.ரங்கசாமி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இந்த நூதன ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எபப்பினர்.

Leave a Reply

You must be logged in to post a comment.