ஸ்ரீநகர்;
பாதுகாப்பு படையினரால் பொதுமக்கள் கொல்லப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜம்மு- காஷ்மீர் மாநிலம் முழுவதும் திங்களன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. பெரும்பாலான கடைகள் மூடப்பட்டதுடன், பெட்ரோல், டீசல் நிலையங்கள் மற்றும் இதர வணிக நிறுவனங்களும் அடைக்கப்பட்டன. பாதுகாப்பு காரணங்களுக்காக ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

Leave a Reply

You must be logged in to post a comment.