பிளாவிடுதி. கறம்பக்குடி தாலுகாவில் சகிக்கமுடியாத சாதிக்கொடுமை. வழக்கம்போல் கட்டப்பஞ்சாயத்து செய்து வெளியே தெரியாமல் முடித்துள்ள கல்வி அதிகாரிகள். கறம்பகுடி மார்க்சிஸ்ட் கட்சி ஒன்றியச்செயலாளர் தோழர் அன்பழகன் அதிகாரிகளிடம் கேட்டபோது அதை பெரிதாக்கவேண்டாம். சமாதானமாகமுடித்து விட்டோம் என தெரிவித்துள்ளனர்.

சம்பவம் என்னவென்றால். பிளாவிடுதி நடுநிலைப்பள்ளியில் பறையர் வகுப்பைச்சேர்ந்த ஒரு மாணவரை சேர்த்தது குற்றம் எனக்கூறி. சாதிவெறிபிடித்த சில ரௌடிகள் பள்ளியின் கழிவறைகளை உடைத்துச் சூறையாடியுள்ளனர். மரக்கன்றுகளை பிடிங்கி நாசப்படுத்தியுள்ளனர். பள்ளி ஆசிரியர்களைத்தாக்க முற்பட்டுள்ளனர். அதன்பிறகு நடவடிக்கை எடுக்கப் பயந்து. பிரச்சினை இனிவராது என முடித்துவிட்டார்கள். புகார்கொடுக்கவிடாமல் தடுத்து மிரட்டிவிட்டனர். இதில் என்ன சமாதானம். அப்புறம் ஏன் சட்டம். அந்தமாணவன் நிலை என்ன ஆனது. தலித்துகளை இனி அந்த பள்ளியில் சேர்ப்பதில்லை என முடிவா? என்ன சமாதானம் என்ன மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு, தெரியவில்லை. இதுபோன்ற நிகழ்வுகள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் அரசு அதிகாரத்தின் மீதான கொஞ்சநெஞ்ச மதிப்பும் கெட்டுப்போகும். விசாரித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்துகிறோம்.
-எஸ்.கவிவர்மன்
சிபிஐ(எம்) மாவட்டச்செயலாளர்.

Kavivarman Srinevasan

Leave A Reply

%d bloggers like this: