லக்னோ,
உத்திரபிரதேசத்தில் மர்ம பொருள் வெடித்து சிதறியதில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உத்திரபிரதேச மாநிலம் முசாபர்நகரில் பழைய இரும்புக் கடை ஒன்றில் இன்று காலை 9.40 மணியளவில் மர்மப்பொருள் ஒன்று வெடித்து சிதறியது. இந்த விபத்தில்சம்பவ இடத்திலேயே 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

தகவலறிந்து விபத்து நடந்த கடைக்கு வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்து வந்து சோதனை நடத்தினர். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: