கோவை,
அரசு நிர்ணயித்த கல்வி கட்டணத்தை காட்டிலும் கூடுதலாக வசூலிக்கும் தனியார் கல்வி நிறுவனங்கள் மீது சட்டப்படியான நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டுமென மாணவர் சங்க மாநாடு வலியுறுத்தியுள்ளது.

இந்திய மாணவர் சங்கத்தின் கோவை சிங்கை நகர மாநாடு பி.ஆர்.புரம் கே.ரமணி நினைவகத்தில் ஞாயிறன்று சங்க நிர்வாகி நித்யா தலைமையில் நடைபெற்றது. மாநாட்டை துவக்கிவைத்து மாணவர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கேப்டன் பிரபாகரன் உரையாற்றினார். மாநாட்டை வாழ்த்தி சங்கத்தின் மாவட்ட துணைச் செயலாளர் காவ்யா, மனோஜ் ஆகியோர் உரையாற்றினர். முன்னதாக, இம்மாநாட்டில் அரசு மாணவர்கள் விடுதிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த வேண்டும். தனியார் கல்வி நிறுவனங்கள் அரசின் விதிமுறைக்கு மாறாக கல்வி கட்டண கொள்ளையில் ஈடுபடுகின்றனர். அதன் மீது சட்டப்படியான நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும். அரசு நிர்ணயித்த கல்வி கட்டணத்தை பள்ளி மற்றும் கல்லூரி வாயில்களில் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கண்ணில் தெரியும்படி விளம்பரப்படுத்தப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் புதிய சிங்கை நகர தலைவராக கோகுலகிருஷ்ணன், செயலாளராக நித்யா மற்றும் 15பேர் கொண்ட சிங்கை நகர குழு தேர்ந்தெடுக்கப்பட்டது.

Leave A Reply

%d bloggers like this: