கோவை,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22 ஆவது அகில இந்திய மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட அரசியல் மற்றும் ஸ்தாபன தீர்மானங்கள் குறித்த சிறப்பு பேரவை கூட்டம் ஞாயிறன்று நடைபெற்றது.

கோவை தடாகம் சாலையில் உள்ள கேசிகே திருமண மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியக்குழு செயலாளர் என்.பாலமூர்த்தி தலைமை தாங்கினார். இதில் அரசியல் தீர்மானம் குறித்து கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன் உரையாற்றினார். இரண்டாவதாக நடைபெற்ற ஸ்தாபன தீர்மானங்கள் குறித்து மாநிலக்குழு உறுப்பினர் அ.பாக்கியம் உரையாற்றினார். இதற்கு எஸ்,எஸ்,குளம் ஒன்றிய செயலாளர் ஆர்,கோபால் தலைமை தாங்கினார், இதில் கட்சியின் மாவட்ட செயலாளர் வி.ராமமூர்த்தி, மாநிலக்குழு உறுப்பினர் சி.பத்மநாபன், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.மேலும், இடைக்குழு உறுப்பினர்கள், மாவட்ட உபக்குழு உறுப்பினர்கள் இப்பேரவையில் பங்கேற்றனர்.

நாமக்கல்
இதேபோல், நாமக்கல் மாவட்டத்தில் தோழர் கே.கருணாகரன் நினைவு அரங்கில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.அசோகன் தலைமையில் நடைபெற்றது. இதில் அரசியல் தீர்மானம் குறித்து கட்சியின்மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேலு பேசினார். இரண்டாவது நடைபெற்ற அமர்வுக்கு மாவட்ட செயற்குழுஉறுப்பினர் ந.வேலுசாமி தலைமை வகித்தா. தமிழகத்தில் சமுக சீர்திருத்தம் குறித்து மாநில கல்வி உபக்குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஸ்பாபு பேசினார். கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்.கந்தசாமி மற்றும் மாவட்ட செயற்குழு, மாவட்டக்குழு உறுப்பினர்கள், இடைக்குழு உறுப்பினர்கள், மாவட்ட உபக்குழு உறுப்பினர்கள் இப்பேரவையில் பங்கேற்றனர்.

Leave A Reply

%d bloggers like this: