புதுச்சேரி,
தமுஎகச 14ஆவது மாநில மாநாட்டை வாழ்த்திப் பேசிய கி.ராஜநாராயணன், “செம்மொழியின் உரைநடைக் காலம் 150 முதல் 200 ஆண்டுகாலம் எனக் கொள்ளலாம். மாநிலத் தலைவர் தமிழ்ச்செல்வன் 5 ஆம் தலைமுறை உரைநடை எழுத்தாளராவார். பேச்சுதான் மொழியின் சுருதி. இப்பேச்சு மொழிக்கு இலக்கணம் உருவாக்க வேண்டும். பேச்சு மொழியில் இருந்தால்தான் அது கேட்க இன்பம். குழந்தையின் மொழி நமக்கு எவ்வளவு இன்பம் அளிக்கிறது. இதற்கு இலக்கணம் சொல்ல முடியாது. 200 ஆண்டுகள் இலக்கியத்திற்கு நாம் பங்களித்தும் 8 முறை நடைபெற்ற உலகத்தமிழ் மாநாடுகளில் ஒருமுறைகூட உரைநடை இலக்கிய படைப்பாளிகளை அழைக்கவில்லை என்பதையும் வேதனையோடு குறிப்பிட வேண்டியுள்ளது என்றார். வாழ்த்துரை வழங்கிய கி.ராவிற்கு அருணனும், நாஞ்சில் நாடனுக்கு எஸ்.ஏ.பெருமாளும், பா.செயப்பிரகாசத்திற்கு ச.தமிழ்ச்செல்வனும் நினைவுப்பரிசு வழங்கினர்.

Leave A Reply

%d bloggers like this: