திருப்பூர்,
திருப்பூரில் ஆதரவற்ற முதியவர் ஒருவர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது உடலை, தொண்டு நிறுவனத்தார் இறுதி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து மின் மயானத்தில் எரியூட்டினர்.

திருப்பூரில் ஆதரவின்றி சுற்றித்திரிந்த ராமக்கிருஷ்ணன் (எ) ராமச்சந்திரன் (60) என்பவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு உறவுகள் யாருமின்றி சாலைகளில் கிடந்தார். கடந்த ஜூன் 5ஆம் தேதியன்று இதை அறிந்து திருப்பூர் அனுப்பர்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் நியூ தெய்வா சிட்டி அறக்கட்டளை தொண்டு நிறுவனத்தார், இங்குள்ள பொதுமக்கள் ஒத்துழைப்போடு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பூர் அரசுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ராமக்கிருஷ்ணன் சிகிச்சை பலனளிக்காமல் கடந்த வெள்ளியன்று மதியம் இறந்துவிட்டார் என 15 வேலம்பாளையம் காவல் நிலையம் மூலம் தெய்வா சிட்டி தொண்டு நிறுவனத்தாருக்கு தகவல் கிடைத்தது. மேலும் கேரள மாநிலத்தில் குடியிருந்து வரும் இவரது அக்கா மகன் ரகுவை கண்டுபிடித்து இது பற்றி தகவல் தெரிவித்துள்ளனர். அவர் திருப்பூருக்கு வந்தபிறகு திருப்பூர் அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்யப்பட்டு ராமக்கிருஷ்ணனின் உடல் ரகுவிடம் ஒப்படைக்கப்பட்டது.

ராமகிருஷ்ணனின் உடலை இங்கேயே அடக்கம் செய்ய உதவும்படி தெய்வா சிட்டி அறக்கட்டளை நிர்வாகிகளிடம் ரகு கேட்டுக் கொண்டார். காவல் துறையில் இது பற்றிய விபரங்கள் உறுதிப்படுத்தப்பட்ட பிறகு, திருப்பூர் அரசு மருத்துவமனயில் இருந்து ராமகிருஷ்ணனின் உடலை இலவச அமரர் ஊர்தியில் ஏற்றி கொண்டு வந்து பொதுமக்கள் உதவியோடு திருப்பூர் ஆத்துப்பாளையம் லயன்ஸ் கிளப் மின் மயானத்தில் ரகு முன்னிலையில் ஞாயிறன்று இறுதி நிகழ்ச்சிகள் நடத்தி உடல் தகனம் செய்யப்பட்டது. நியூ தெய்வா சிட்டி அறக்கட்டளைச் செயலாளர் ந.தெய்வராஜ், செயலாளர் சிவகாமி, உறுப்பினர்கள் செல்வராஜ், சண்முகராஜ், சம்பத், உள்பட அனுப்பர்பாளையம் பகுதி மக்கள் பலர் இதில் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.