புதுச்சேரி,
சுயமரியாதையை இழிவுபடுத்தும் சடங்குகளுக்கு எதிராக தடைச்சட்டம் இயற்ற வேண்டும் என்று புதுச்சேரியில் ஞாயிறன்று நிறைவடைந்த தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 14வது மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: அரசுப்பள்ளிகள் மற்றும் தனியார்பள்ளிகளில் மதம் சார்ந்த நிகழ்வுகள், மத அமைப்புகளின் நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதற்குத் தடைவிதிக்க வேண்டும். காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மணவாளமா முனிகள் சன்னதியில் பிராமணர் அல்லாதார் தலைவாசலுக்குவெளியேநிறுத்தப்படுவதும், தமிழ் திவ்யப்பிரபந்தம் பாட அனுமதி மறுக்கப்படுவதும் இன்றளவும் தொடர்கிறது.இதனை அறநிலையத்துறை அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை. ஆலய வாயிலில் இந்த அப்பட்டமான சாதியப்பாகுபாடு, தமிழ்புறக்கணிப்பு இரண்டையும் மாநாடு கண்டிக்கிறது.

அரசு நூலகங்களை வலுப்படுத்தி அரசியல் உள்ளிட்ட அனைத்து நூல்களும் வாங்கப்பட வேண்டும்; இதுவெளிப்படைத் தன்மையுடன் நடைபெற வேண்டும். 1897ல்முதல் சலனப்படம் திரையிடப்பட்ட சென்னை விக்டோரியாஹால், தமிழ்சினிமா நூற்றாண்டை யொட்டி தமிழ்சினிமா ஆவணக்காப்ப கமாக்கிடவேண்டும். கலை இலக்கிய நிகழ்ச்சிகளுக்குத் திறந்துவிட வேண்டும். அனைத்து நகரங்கள், ஊர்களிலும் அரசு மன்றங்கள் குறைந்த கட்டணத்தில் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கலை இரவு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் நேரக்கட்டுப்பாடு என்றபெயரில் காவல் துறை தலையிடுகிறது. அரங்க நிகழ்ச்சிகளுக்குகூட ஒப்புதல் பெறவற்புறுத்தப்படுகிறது. இதை அரசு கைவிடவேண்டும். அனைத்துச்சாதியினரும் அர்ச்சகராக சட்டம் கொண்டு வந்து செயல்படுத்துகிற கேரள இடதுஜனநாயக முன்னணி அரசுக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்துக் கொள்கிறோம். தமிழக அரசும் இதைச் செயல்படுத்த வேண்டும். தமிழகத்தில் மூடநம்பிக்கைகள் மனித சுய மரியாதையை இழிவுபடுத்தும் சடங்குகள் தடைச்சட்டம் கொண்டுவந்து சமூக சீர்திருத்த நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.

சாதிஆணவக் கொலைகள் சட்டம் நிறைவேற்றப்பட்டு செயல்படுத்தப்பட வேண்டும். மேலாண்மை நூல்கள் தேசவுடைமையாக்கப்பட்டதற்கு தமிழக அரசுக்கு மாநாடு நன்றிதெரிவித்துக் கொள்கிறது. அவரது நூல்கள் எங்கும் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளக்கோருகிறது. தமிழ் வழிக் கல்வி, தமிழ் வழிபயின்றோருக்கு முன்னுரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும். அதற்காக உள்ள சட்டம் செயல்படுத்தப்பட வேண்டும். உயர் நீதிமன்ற விழுக்காடு மொழியாக தமிழ் ஏற்கப்படவேண்டும். எக் காரணத்தைக் கொண்டும் இந்தித்திணிப்பை ஏற்பதற்கில்லை. ஆங்கிலத்தை ஒரு மொழியாகக் கற்பதில் நமக்கு மறுப்பில்லை. ஆனால் அதுவே வாழ்வின் ஆதாரமாக்கப்படுவது எதிர்க்கப்படவேண்டியது. தமிழ்வழி கல்வி, வாய்ப்புகளை, ஏற்ற சூழலை அரசு உருவாக்கவேண்டும்.  இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக இத்தீர்மானங்களை அ.குமரேசன் முன்மொழிந்தார். அதனை தேனி வசந்தன் வழிமொழிந்தார்.

 

கே.முத்தையா நூற்றாண்டு விழாவை ஆண்டு முழுவதும் கொண்டாடுவோம்

தோழர் கே. முத்தையா நூற்றாண்டு விழாவை ஆண்டு முழுவதும் கோலாகலமாக கொண்டாடுவோம் .நம்முடைய தமுஎகசவை உருவாக்கிய தலைவர்களில் ஒருவர் தோழர் கே.முத்தையா.தமுஎகசவின் முதல் பொதுச்செயலாளராகவும், தலைவராகவும் கவுரவத் தலைவராகவும் பணியாற்றி நமக்கு வழிகாட்டியவர் இலக்கியத்தை வர்க்கப் பார்வையுடன் பார்ப்பதற்கு கற்றுத் தந்தவர். நாவல், நாடகம், பத்திரிகைத்துறை என பல்வேறு துறைகளில் முத்திரை பதித்தவர். அவரது நூற்றாண்டு துவக்க விழா பட்டுக்கோட்டையில் சிறப்பாகநடைபெற்றது.

தொடர்ந்து இந்த ஆண்டு முழுவதும் தோழர் கே.முத்தையா நூற்றாண்டு விழாவை கருத்தரங்கம், ஆய்வரங்கம், கலை விழாவாகவும் தொடர்ந்து நடத்துவது என இந்த மாநாடு முடிவு செய்கிறது. அவரதுபடைப்புகளை மக்களிடம் கொண்டுசேர்க்கும்பணியையும் தொடர்வது என இந்த மாநாடு முடிவு செய்கிறது. முன்னதாக இத்தீர்மானத்தை எஸ்.ஏ.பெருமாள் முன்மொழிந்தார். கவிஞர் ஜீவலட்சுமி வழிமொழிந்தார்.

Leave A Reply

%d bloggers like this: