திருப்பபூர்,
திருப்பூர் சிக்கண்ணா கலைக்கல்லூரில் முதுநிலை பட்டப்படிப்பிற்கு வரும் 28ந் தேதி வரை விண்ணப்பிக் கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் எம்.ஏ. ஆங்கில இலக்கியம், எம்.எஸ்.சி. கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், கணினி அறிவியல், ஆடை வடிவமைப்பு, எம்.காம், எம்.காம் (ஐ.பி) ஆகிய முதுகலை பாடப்பிரிவுகள் உள்ளது. இந்த பாடப்பிரிவுகளில் 350 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் ஜூன் 11ம் தேதி விநியோகப்பட்டு வருகிறது. இதுவரை 323 விண்ணப்பங்கள் விற்பனையாகி உள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 28ம் தேதி கடைசி நாளாகும்.இதையடுத்து, தரவரிசை பட்டியல் ஜூலை 3ந் தேதி வெளியிடப்படுகிறது. மேலும், மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு 5ந் தேதி நடைபெறுகிறது என கல்லூரி பொறுப்பு முதல்வர் தெரிவித்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.