திருநெல்வேலி,
குற்றாலத்தில் சீசன் களைகட்டியுள்ள நிலையில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பாதுகாப்புப் பணியில் 200 காவல்துறையினர் நியமிக்கப் பட்டுள்ளனர்.

குற்றாலத்தில் தற்போது சீசன்களைகட்டியுள்ள நிலையில் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழையகுற் றால அருவி, புலிஅருவி, சிற்றருவி, செண்பகாதேவி அருவி, தேனருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குற்றாலம் வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவும், வாகனங்களை ஒழுங்குபடுத்தவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்சக்திகுமார் உத்தரவின் பேரில் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் 200 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள் ளனர்.

மேலும் குற்றாலத்திற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பிற்காக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அனைத்து அருவிப்பகுதிகள், பேருந்து நிலையம் மற்றும் முக்கிய இடங்களில் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அனைத்து இடங்களையும் கண்காணிக்கும் ரோந்து வாகனம் செயல்பட்டு வருகிறது. சாலைகளில் அனைத்து வாகனங்களையும் சோதனை செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. குற்றாலம் பாதுகாப்புப் பணியில் குற்றாலம், தென்காசி, செங்கோட்டை, காவல்துறையினர், பாளையங்கோட்டை ஆயுதப்படையினர், மணிமுத்தாறு சிறப்பு காவல் படையினர் உட்பட 200 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சுற்றுலாப்பயணிகள் தங்களுக்கு ஏதாவது இடையூறு ஏற்பட்டாலும், தங்கள் கண்முன்னே ஏதாவது குற்றச்செயல்கள் நடைபெற்றாலும் உடனடியாக குற்றாலம் காவல் நிலைய தொலைபேசி 04633 283137 என்ற எண்ணை தொடர்பு கொண்டு பேசலாம் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.