திருப்பூர்,
திருப்பூர் கோல்டன் நகர் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கொடிகள் ஞாயிறன்று இன்குலாப் ஜிந்தாபாத் முழக்கத்துடன் ஏற்றப்பட்டது.

திருப்பூர் மாநகர் 23 வது வார்டு கோல்டன் நகர் பகுதியில் 1992 ஆம் ஆண்டு முதல் சிபிஎம், சிபிஐ ஆகியவற்றின் கொடிகம்பங்கள் உள்ளன. இந்நிலையில், இந்து முன்னணியினர் கடந்த 17 ஆம் தேதி கொடிக்கம் பங்களை இரவோடு இரவாக அறுத்து எடுத்து விட்டு அவர்களது கொடிக்கம்பத்தையும் போர்டுகளையும் வைத்து கொடியேற்ற ஏற்பாடு செய்திருந்தனர். இதனால், சிபிஎம் மற்றும் சிபிஐ சார்பில் திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். காவல் ஆய்வாளர் மற்றும் ஆணையர் சம்பவ இடத்திற்கே வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணை நடத்திய அதிகாரிகள், இந்து முன்னணியினர் மீது புகார் இருப்பதால் கோல்டன் நகர் பகுதியில் கொடியேற்ற வேண்டாம் என கூறினோம் அவர்களும் கொடியேற்ற வரமாட்டோம் என்று கூறிவிட்டனர் என்றனர்.

ஆனால், பகல் 12 மணியளவில் காவலர்களை தகாத வார்த்தைகளால் பேசினர். மேலும், அராஜகமான முறையில் கொடியேற்றினர். இதைதட்டி கேட்ட இந்திய கம்யூனிஸ்ட்கட்சியை சேர்ந்த மாரிப்பாண்டியை, இந்து முன்னணியை சேர்ந்தமோகன், விக்கி அருண், சந்தோஷ் ஆகியோர் சரமாரியாகதாக்கினர். இதனால் பலத்தகாயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  இந்நிலையில் திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. மேலும், அனைத்து கட்சிகள் சார்பில் கடந்த திங்களன்று இந்து முன்னணியின் அராஜகத்தை கட்டுப்படுத்தக்கோரி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகர காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் மனு அளித்தனர். இதையறிந்த இந்து முன்னணியினர் கொடிக்கம்பத்தை அப்புறப்படுத்தினர். இந்நிலையில், ஞாயிறன்று மார்க்சிஸ்ட் கட்சியின் கொடியை மாநில குழு உறுப்பினர் கே.காமராஜ் ஏற்றிவைத்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கொடியை மாரிப்பாண்டியும், ஏஐடியுசி தொழிற்சங்க கொடியை தொழிற்சங்க தலைவர் பழனிசாமி ஏற்றி வைத்தனர். பின்பு தெருமுனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை செயலாளர் பழனிசாமி தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் செ.முத்துக்கண்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர்ரவி, மார்க்சிஸ்ட் கட்சி வடக்கு மாநகர செயலாளர் முருகேசன், இந்தியகம்யூனிஸ்ட் கட்சி 2 மண்டல செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இந்த நிகழ்வில் ஐநூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: