திருப்பூர்,
திருப்பூர் உழவர் சந்தை அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆம்னி வேனை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.

திருப்பூர் பூசாரிபாளையம் கண்டியன் கோவிலை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (44). விவசாயியான இவர், தனது ஆம்னி வேனில் காய்கறிகளை எடுத்துக்கொண்டு, திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள தெற்கு உழவர் சந்தைக்கு வந்துள்ளார்.. பின்னர் மாநகராட்சி பொது கழிப்பிடம் அருகே வேனை நிறுத்தி விட்டு, உழவர் சந்தைக்குள் சென்று காய்கறிகளை விற்றுவிட்டு, திரும்பியுள்ளார். அப்போது அங்கு நிறுத்தியிருந்த வேனை காணவில்லை.  இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், திருப்பூர் தெற்கு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Leave A Reply