பொள்ளாச்சி,
பொள்ளாச்சி அருகே கோவிந்தாபுரத்தில் இரு சக்கர வாகனத்தின் மீது கார் மோதியதில் கேரளா மாநிலம், திருச்சூரை சேர்ந்த வங்கி மேலாளர் உள்ளிட்ட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜான் பால், இவர் பெடரல் வங்கி மேலாளராக பணியாற்றி வருகிறார், இவரது நண்பர்கள் ஜோ பி தாமஸ், சிஜூ வினுஜன், ஜார்ஜ், அபிலாஷ் உள்ளிட்ட 6 பேரும் சனியன்று பொள்ளாச்சி அருகே உள்ள வால்பாறைக்கு காரில் சுற்றுலா செல்வதற்காக வந்துள்ளனர். இந்நிலையில் ஞாயிறன்று பிற்பகல் பொள்ளாச்சி அடுத்துள்ள கோவிந்தாபுரம் என்ற இடத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரே வந்து இரு சக்கரவாகனத்தின் மீது மோதியது. மேலும் எதிரே உள்ள மரத்தின் மீது வேகமாக மோதியதில் கார் இடிபாடிகளில் சிக்கியது. விபத்தில் வங்கி மேலாளர் ஜான் பால், வங்கி ஊழியர் ஜோபி தாமஸ், சிஜூ மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழிந்தனர். இதனையடுத்து பொதுமக்கள் படுகாயமடைந்த மூன்று பேரையும் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இரு சக்கர வாகனத்தில் வந்த பொள்ளாச்சி கோட்டூரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் அவரது மனைவி பானுபிரியா மற்றும் குழந்தை முத்திரன் பலத்த காயங்களுடன் பொள்ளாச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து ஆனைமலை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: