எட்டு வழிச்சாலையோட மெயின் பாய்ன்ட் சென்னை ட்டூ சேலம் கிடையாது அப்டியே கோயம்புத்தூர் வழியா கொச்சின் போறதுதான் இவர்களுடைய திட்டமாக இருக்கும்..

வேணும்னா மேப் எடுத்துப் பாருங்க எட்டுவழிச்சாலை சென்னைலேருந்து சேலத்துக்கு ஸ்ட்ரைட்டா வருது. அப்டியே சேலம் கோவை கொச்சின் ஸ்ட்ரைட்டா இருக்கும்.

அதாவது சென்னை ஹார்பர் ட்டூ கொச்சின் ஹார்பர்..
எங்கயோ இடிக்கிற மாதிரி தெரியுமே..
அதுதான் அதேதான்…
சாகர்மாலா ப்ராஜக்ட்டேதான்

கொச்சின் ஹார்பருக்கு வர்ர இரும்புத்தாது மற்றும் நிலக்கரிய சென்னைக்கு கொண்டு வரதுக்கு ஒரு வழி ஏன்னா கப்பல்ல போனா இலங்கைய சுத்தி போகனும்

அதுவுமில்லாம ஒவ்வொரு மாநிலத்துக்கும் சப்ளை பன்றதுக்கு எக்ஸ்ப்ரஸ் வே மூலமா இன்ட்டர் கனெக்ட் பன்றானுக..

அல்ரெடி சென்னை பெங்களூர் மற்றும்
ஆந்திரா எக்ஸ்ப்ரஸ் வே வேலை நடந்துட்டு இருக்கு..

அப்ப காங்கிரஸ் வந்தா மாறுமான்னு கேக்குறீங்களா .. ஒரு மண்ணும் மாறாது அவனுக இதைவிட சிறப்பா பன்னுவானுக..

ஏன்னா மக்கள் எதிர்ப்பை மீறி சாராயக்கடை தொறக்குறதான் கஸ்டம் அதை பிஜெபி நன்னாவே செஞ்சுட்டானுக..
அதனால காங்கிரஸுக்கு பார் தொறக்குறதுல பிரச்சனை இருக்காது..

-Raja M

குறிப்பு :

சாகர்மாலா திட்டத்தை 2015-ம் ஆண்டு தொடங்கி முதல் செயற்குழு கூடிய போது தமிழகத்தின் சார்பில் கலந்து கொண்டது யார் தெரியுமா?… அப்போதைய சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிதான். அவர்தான் இப்போதைய தமிழக முதல்வர்…

Leave A Reply

%d bloggers like this: