அரியலூர்,
ஜெயங்ககொண்டம் அருகே மீத்தேன் திட்டத்தை எதிர்த்து துண்டுப்பிரசுரம் விநியோகித்தவரை காவல் துறையினர் கைது செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் மீத்தேன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கதிரவன் என்பவர் துண்டு பிரசுரம் விநியோகித்துள்ளார். இதைத்தொடர்ந்து அங்கு வந்த காவல் துறையினர் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தாக மக்கள் அதிகாரம் அமைப்பின் கதிரவன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: