பெங்களூரு,
கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் ( பெல் ) நடைபெற்ற தொழிற்சங்க அங்கீகார தேர்தலில் 53.54 சதவிகித வாக்குகள் பெற்று முதன்மை தொழிற்சங்கமாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது.

பெங்களூரில் உள்ள பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் உள்ள தொழிற்சங்க அங்கீகார தேர்தல் இன்று நடைபெற்றது. இந்த தேர்தலில் சிஐடியு தொழிற்சங்கமான பி.இ.டபிள்யூ. யூ உள்ளிட்ட நான்கு பதிவு செய்யப்பட்ட தொழிற்சங்கங்கள் தேர்தலில் போட்டியிட்டன. இதில் சிஐடியு தொழிற்சங்கமான பி.இ.டபிள்யூ.யூ தொழிற்சங்கத்திற்கு 53.54 சதவிகித தொழிலாளர்கள் வாக்களித்து முதன்மை தொழிற்சங்கமான தேர்வு செய்துள்ளனர்.

மொத்தம் பதிவான 1539 வாக்குகளில் சிஐடியு தொழிற்சங்கம் 824 வாக்குகளை பெற்றது. பாரதிய ஜனதா தொழிற்சங்கமான பிஇஎம்எஸ் தொழிற்சங்கம் 98 வாக்குகள்(6.36 சதவிகிதம் ) மட்டும் பெற்று கடைசி இடத்தை பிடித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சிஐடியுவை முதன்மை தொழிற்சங்கமாக தேர்வு செய்து பெல் நிறுவன தொழிளாலர்களுக்கு கர்நாடக மாநில சிஐடியு மாநிலக்குழு வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்திருக்கிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.