கேரளாவில் மாநில நிதியமைச்சரும் பொருளாதார அறிஞருமான தோழர். டாக்டர் தாமஸ் ஐசக்… பணமதிப்பு நீக்கம் குறித்த கடும் விமர்சனத்தைப் பதிவு செய்த கையோடு…இந்த மீளமுடியாத துயரிலிருந்து மக்களை எப்படி மீட்பது என்று சிந்திக்கிறார்….

செயலிலும் இறங்குகிறார்…தான் அங்கமாக இருக்கும் இடதுமுன்னணி அரசில் அங்கம் வகிக்கும் தனது சக அமைச்சரான தோழர். கடகம்பள்ளி சுரேந்திரன் உள்ளிட்ட தோழர்களுடன் விரைந்து செயல்பாட்டில் இறங்குகிறார்…முதல்வர் தோழர். பிணராயி விஜயன் அவரது செயல்பாடுகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கிறார்…

மத்திய அரசின் கட்டுபாட்டில் உள்ள பொதுத்துறை வங்கிகளும் இந்தப் பிரச்சனையை எளிதாகக் கையாள மாநில அரசு சார்பில் சில ஆலோசனைகளை கொடுத்து அவற்றை பின்பற்றும்படி வேண்டுகோள் விடுத்தார்…

அதோடு இன்னொரு வழியிலும் திட்டமிட்டார்… கூட்டுறவுத்துறை அமைச்சரான தோழர். கடகம்பள்ளி சுரேந்திரன் ஒத்துழைப்போடு எல்லா கூட்டுறவு வங்கிகளிலும் ரூபாய் நோட்டுகளை, மாற்றுவதற்கும் புது 2000 ரூபாய் நோட்டை விநியோகம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டது. சாதரண ஏழை கிராமப்புற மக்களும் எளிதில் இந்தப் பிரச்சனையிலிருந்து விடுபட இந்த நடவடிக்கை பெரிய அளவில் பயன்பட்டது….புலம் பெயர்ந்த அந்நிய மாநிலத் தொழிலாளர்கள் உட்பட பலருக்கும் இது பெரும் உதவியாக அமைந்தது. ஆயிரக்கணக்கான கூட்டுறவு வங்கிகளை கொண்ட கேரளாவில் இவ்வாறு ஒரு நடவடிக்கை எடுக்கப்பட்டதால் மற்ற மாநிலங்களில் வங்கிகளின் முன்பு கிலோமீட்டர் கணக்கில் வரிசைகளில் நின்று அவதிப்பட்டதைப் போன்ற நிகழ்வுகளை பெருமளவு
கேரளாவில் தவிர்க்க முடிந்தது…

முதல் சில நாட்களின் கடும் நெருக்கடிக்குப் பிறகு கேரளாவில் நிலைமை எளிதில் சீரடைந்தது… அதற்கான முக்கிய காரணமாக கூட்டுறவு வங்கிகளைக் கொண்டு இந்த பிரச்சனையைக் கையாண்டதே ஆகும் என்று அனைவரும் உணர்ந்தனர்…இது பொதுமக்களுக்கும், அவர்களின் நலனுக்காக செயல்படும் இடதுமுன்னணி அரசுக்கும் பெரும் ஆசுவாசமாக அமைந்தாலும் ஒரு சிலருக்கு கண்ணில் விழுந்த சிறு துரும்பாக உறுத்தத் தொடங்கியது….அதிலும் அந்த மாநிலத்தில் உள்ள பாஜக-வினருக்கு பொறுத்துக்கொள்ள முடியாத சகிப்பின்மையை கொடுத்தது….பாஜக ஆட்சியில் இருக்கும் மாநிலங்கள் உட்பட எல்லா மாநிலங்களும் இந்த பிரச்சனையால் திணறும் போது…மக்கள் கொத்துக்கொத்தாக மடியும் போது இங்கே மட்டும் எப்படி இதுபோன்ற இவ்வளவு இலகுவான தீர்வு ஏற்படலாம்…என்ற குதர்க்க எண்ணத்திற்கு ஆட்பட்டார்கள்…

மோடியிடம் முறையிட்டர்கள்…மோடி ரிசர்வ் வங்கி மூலமாக கூட்டுறவு வங்கிகளுக்கு புது கட்டளை பிறப்பித்தார்…கறுப்புப்பண ஒழிப்பு நடவடிக்கைக்காக எடுக்கப்பட்ட இந்த பண மதிப்பு நீக்க நடவடிக்கையை, கூட்டுறவு வங்கிகள் அர்த்தமற்றதாக்குவதாக ரிசர்வ் வங்கி கூறியது…கறுப்புப்பணத்தை சட்டரீதியாக செல்லுபடியாகும் பணமாக மாற்ற கூட்டுறவு வங்கிகள் மூலம் முயற்சி செய்யப்படுவதாகவும், கறுப்புப்பணம் பெருக கூட்டுறவு வங்கிகளும் முக்கிய காரணம் என்று சங்கிகளின் குற்றச்சாட்டுகளை தனது கருத்தாகக் கூறி ரிசர்வ் வங்கி கூசாமல் புளுகியது… கூட்டுறவு வங்கிகள் பழைய ரூபாய் நோட்டுகளை பொதுமக்களிடமிருந்து நேரடியாக பெற்று, அவற்றை புதிய நோட்டாக மாற்றிக்கொடுக்கக் கூடாது என்று அறிவித்தது… கூட்டுறவு வங்கிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு வழங்கிவந்த புதிய ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி நிறுத்தியது….

அதோடு சி.பி.ஐ என்ற வளர்ப்பு நாயையும் கூட்டுறவு சங்கங்ககளை நோக்கி மோடி அரசு ஏவியது…தோழர். கடகம்பள்ளி சுரேந்திரனை முன்னிறுத்தி, கம்யூனிஸ்டுகள் கறுப்புப்பணத்தை ஒழிக்க தடையாக இருப்பதாக பொதுவெளியில் ஊடகங்கள் மூலம் குற்றம் சாட்டினார்கள்….

ஆனால் தோழர் கடகம்பள்ளி சுரேந்திரன்,”மடியில் கனம் இருப்பவர்கள் தான் வழியில் பயப்பட வேண்டும்…சிபிஐ ரெய்டு நடக்கட்டும் நாங்கள் அதற்கு ஒத்துழைப்பு கொடுக்கிறோம்…இது நம்மை அக்கினி சுத்தி செய்ய உதவும்…நமது கூட்டுறவு சங்கங்களின் மேன்மையை இந்த மக்களுக்கு உணர்த்தும்” என்று கூறினார்…

சிபிஐ ரெய்டு நடத்தியது…கறுப்புப்பணம் பற்றிய எந்த குற்றச்சாட்டுக்கும் ஆதாரங்களை திரட்ட இயலாமல் சிபிஐ தவித்தது…இறுதியில் மோடியின் அந்த நாடகம் முடிவுக்கு வந்தது….

இது ஒருபுறம் இருக்கட்டும்…ஆனால் இதை ஏன் இப்போது கூற வேண்டுமென்றால்….

அமித் ஷா இயக்குனராக இருக்கும் கூட்டுறவு வங்கியில் நடந்த ரூபாய் 745 கோடி முறைகேடு குறித்த தகவல்கள் வெளியான போது, ஏன் சங்கிகள் இந்த குற்றச்சாட்டை இடதுமுன்னணி மீது இவ்வளவு வலுவாக மிகுந்த நம்பிக்கையோடு சுமத்தினார்கள் என்று இப்போது புரிகிறது….ஏற்கனவே சிலகாலம் முன்பு குஜராத்தில் பணமதிப்பு நீக்க காலத்தில் கூட்டுறவு வங்கிகள் முறைகேடுகளில் ஈடுபாட்ட ஒருசில தகவல்கள் வெளியாகின… சங்கிகள் கூட்டுறவு வங்கிகளை எவ்வாறு அணுகுகிறார்களோ அது போலவே மற்றவர்களும் அணுகுவார்கள் என்று நினைத்திருக்கக்கூடும்…அந்தவகையில் தான் கம்யூனிஸ்டுகள் மேல் பழியை சுமத்தி இழிவுபடுத்த நினைத்தார்கள்…அவர்கள் செய்ததைத்தான் கம்யூனிஸ்ட்டுகளும் செய்வார்கள் என்று எதிர்பார்த்து ஏமாந்துவிட்டார்கள்..!

ஒருவிதத்தில் அதுவும் சரிதான்…பாம்பின்கால் பாம்பறியும்…!

Sadan Thuckalai

Leave a Reply

You must be logged in to post a comment.