போபால், ஜூன் 23-

குத்தகைக்கு எடுத்துப் பயிரிட்டுவரும் தன் நிலத்தை ஆக்கிரமிக்க முயன்றதை எதிர்த்ததற்காக ஒரு தலித் விவசாயி, நான்கு கயவர்களால் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

மத்தியப்பிரதேச மாநிலம், போபால் மாவட்டத்தில் பெராசியா தாலுக்காவில் பர்சோரியா கட்கேடி என்னுமிடத்தில் வியாழன் அன்று இக் கொடுமையான சம்பவம் நடைபெற்றது.

கிசோரிலால் ஜாதவ் (வயது 70) என்னும் தலித் விவசாயி கொஞ்சம் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்துப் பயிரிட்டு வருகிறார்.  இதனை தீரன் யாதவ், பிரகாஷ் யாதவ், சஞ்சு யாதவ் மற்றும் பல்வீர் யாதவ் என்பவர்கள் கிசோரிலால் நிலத்தில் டிராக்டர் வைத்து நிலத்தைப் மூலம் நிலத்தை உழுவதற்கு முயன்றிருக்கிறார்கள். அப்போது அங்கு வந்த கிசோரிலால் ஜாதவ் தன்நிலத்தை அவர்களுக்கு விட்டுக்கொடுக்க முடியாது என்று கூறியிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த மேற்படி நான்கு கயவர்களும் கிசோரிலால் ஜாதவ் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொளுத்தி இருக்கின்றனர்.  கிசோரிலால் ஜாதவ் தீக்காயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறார். எனினும் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்வதற்கு முன்பே  இறந்துவிட்டார்.

சம்பவம் தொடர்பாக தீரன், பிரகாஷ், சஞ்சு மற்றும் பல்வீர் ஆகிய நால்வர் மீதும் கொலை வழக்குப் பதிவுசெய்யப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்று காவல் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் (போபால்), தர்மேந்திரா சௌத்ரி கூறினார்.

இச்சம்பவத்தை மத்தியப்பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் கண்டித்திருப்பதுடன்,  கயவர்களை விட்டுவிட மாட்டோம் என்றும் கூறியுள்ளார்.

(பிடிஐ)

Leave a Reply

You must be logged in to post a comment.