கோஹிமா:
நாகலாந்து மாநில காவல்துறை டிஜிபி-யை, பணிமாற்றம் செய்து, பாஜக பழிவாங்கியுள்ளது.நாகலாந்து மாநிலத்தில் பாஜக ஆதரவுடன், நாகா மக்கள் முன்னணி கட்சியின் ஆட்சி நடைப்பெற்று வருகிறது. முதல்வராக நெப்யூ ரியோ இருந்து வருகிறார். ரூபின் சர்மா மாநில டிஜிபி-யாகவும் இருந்து வருகிறார்.கடந்த பிப்ரவரி மாதம் நடைப்பெற்ற சட்டப்பேரவைத் தேர்தலின்போது, டிஜிபி ரூபின் சர்மா மிகவும் நேர்மையாக நடந்து கொண்டார். இதனால் பல்வேறு கட்சிகளின் ஆத்திரத்திற்கு அவர் ஆளானார். குறிப்பாக, பாஜக அவர் மீது பெரும் வன்மத்தை கொட்டியது.

இந்நிலையில், மாநில ஆட்சி அதிகாரம் தங்களின் பிடியில் வந்து விட்டதால், நாகா மக்கள் முன்னணியை மிரட்டி, ரூபின் சர்மாவுக்கு எதிராக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு புகார் மனுக்களை அனுப்ப வைத்தது. இதனடிப்படையில், ரூபின் சர்மாவை இடமாற்றம் செய்து, மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அவருக்குப் பதிலாக ஏடிஜிபி ரென்சாமோ பி கிக்கான் டிஜிபி-யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.