திருச்சி:
தீக்கதிர் நாளிதழ் விநியோகப் பிரிவில் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி
வந்த கே.மகேஷ் காலமானார். திருச்சி பதிப்பு துவங்குவதற்கு முன்பிருந்தே மதுரை
யிலிருந்து அச்சிடப்பட்டு அனுப்பப்பட்ட நாளிதழை திருச்சியிலிருந்து திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு தொடர்ச்சியாக விநியோகம் செய்து வந்த கே.மகேஷ் உடல்நலக்குறைவின் காரணமாக கடந்த 6 மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் ஜூன் 23 (சனிக்கிழமை) அதிகாலை இயற்கை எய்தினார்.அவரது மறைவு செய்தி அறிந்து தீக்கதிர் நாளிதழின் முதன்மை பொது மேலா
ளர் கே.கனகராஜ், சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர்கள் என்.சீனிவாசன், எஸ்.ஸ்ரீதர் ஆகியோர் இரங்கல் தெரிவித்தனர். திருச்சி பதிப்பு பொது மேலாளர் எஸ்.பன்னீர்செல்வம், விளம்பர பொறுப்பாளர் ஆர்.ஸ்டாலின், விநியோகப் பிரிவு ஊழியர்கள் பி.செல்வம், எஸ்.குமார் ஆகி
யோர் அவரது உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலிசெலுத்தினர். இவருக்கு மனைவி, ஒரு மகன், திருமணமான ஒரு மகள் உள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: