ராமநாதபுரம்
சாயல்குடி பகுதியில் குடிசை வீடு ஒன்றிற்கு ரூ.58 ஆயிரம் மின்கட்டணம் வந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளனர்.
செவல்பட்டி, தரைக்குடி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்அளவீட்டில் குளறுபடி என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் குடிசை வீட்டிற்கு மாத மின்கட்டணம் ரூ.58,000 வந்துள்ளது. இதைத்தொடர்ந்து ரூ.58,000 மின்கட்டணம் பற்றி புகாரளித்தும் மின்வாரியம் விளக்கம் தரவில்லை. இதுகுறித்து புகார் அளித்தும் மின்வாரியம் கண்டு கொள்ள வில்லை என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: