26-வது லீக் ஆட்டத்தில் பலமான சுவிட்சர்லாந்து அணியை,செர்பியா அணி எதிர்கொண்டது.இரு அணிகளுக்குமே இந்த ஆட்டம் மிக முக்கியமானது என்பதால் தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்றது.

யாரும் எதிர்பாராத வகையில் ஆட்டத்தின் 5-வது நிமிடத்திலேயே செர்பியா அணியின் வீரர் அலெக்சாண்டர் மிட்ரோவிக் கோலடிக்க சுவிட்சர்லாந்து அணி அதிர்ச்சியில் உறைந்தது.
பதிலுக்கு கோலடிக்க சுவிட்சர்லாந்து அணி வீரர்கள் பலமுறை முயன்றும் செர்பியா கோல் கீப்பரின் அசத்தலான ஆட்டத்தால் கோலடிக்க முடியவில்லை.முதல் பாதியில் 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

இரண்டாம் பாதியில் செர்பியா அணியின் வியூகத்தை அறிந்து கொண்ட சுவிட்சர்லாந்து அணி தாக்குதல் பாணி ஆட்டத்தின் மூலம் செர்பிய அணிக்கு கடும் நெருக்கடி கொடுத்தது.52-வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்து அணியின் வீரர் ஷாகா 30 அடி தூரத்திலிருந்து துல்லியமான கணிப்பின் மூலம் கோலடித்து அசத்தினார்.

இந்த ஆட்டம் டிராவில் முடிவடையும் என எதிர்பார்த்த நிலையில், 90-வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்து அணியின் ஷாக்ரி தனி ஒருவராக போராடி கோலடித்தார்.இந்த இறுதி கட்ட கோலால் சுவிட்சர்லாந்து 2-1 என்ற கோல் கணக்கில்வெற்றி பெற்று நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது.ஆட்டநாயனாக சுவிட்சர்லாந்து வீரர் ஷாக்ரி தேர்வு செய்யப்பட்டார்.

Leave a Reply

You must be logged in to post a comment.