ஐஸ்லாந்து-நைஜீரியா அணிகள் மோதிய 25-வது லீக் ஆட்டம் வால்கோகிராட் மைதானத்தில் வெள்ளியன்று இரவு 8:30 மணிக்கு தொடங்கியது.

முதல் லீக்கில் அசத்தலான தடுப்பாட்டத்தின் மூலம் அர்ஜெண்டினாவை திணறவைத்த ஐஸ்லாந்து,நைஜீரிய அணிக்கெதிரான ஆட்டத்தில் தடுப்பாட்டத்தின் பலத்தை குறைத்து முன்களத்தை பலப்படுத்தியது.இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் சம பலத்தில் மோதி கொண்டாலும், கோலடிப்பதில் பல்வேறு தவறுகளை செய்தது.முதல் பாதியில் இரு அணிக வீரர்களும் கோலடிக்க முடியாமல் திணறினர்.

இரண்டாம் பாதியில் நைஜீரிய அணியின் கை ஓங்கியது.49-வது நிமிடத்தில் நைஜீரிய வீரர் அஹமத் மூசா கோலடித்தார்.பதிலுக்கு கோலடிக்க ஐஸ்லாந்து அணி வீரர்கள் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.இருப்பினும் 75-வது நிமிடத்தில் முதல் கோலை அடித்த மூசா நடுகளத்தில் இருந்து தனி ஒருவராக கடத்தி வந்த பந்தை ஐஸ்லாந்து அணியின் மூன்று தடுப்பாட்ட வீரர்கள் மற்றும் கோல்கீப்பரையும் ஏமாற்றி கோலடித்து அசத்தினார்.இறுதியில் நைஜீரிய அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

Leave a Reply

You must be logged in to post a comment.