ஆளுநர் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரித்து நாமக்கல்லில் போராட்டத்தில் ஈடுபட்ட 190 பேரை காவல் துறையினர் கைது செய்தற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று  திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் ஆளுநர் மாளிகை முன்பு முற்றுகை  போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் கைது செய்யப்பட்டிருக்கும் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரை சிறையில் அடைக்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது.

முன்னதாக திமுகவினர் சிறையிலடைக்கப்பட்டிருப்பதற்கு எதிப்பு தெரிவித்து மு.க.ஸ்டாலின்  போராட்டத்தில் ஈடுபட்ட போது  கூறியதாவது:
நேற்று நாமக்கல்லில் ஆளுநர் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்த திமுகவினர் அனைவரும் கைது செய்யப்பட்டு, இரவோடு இரவாக சேலம் மத்திய சிறைச்சாலையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். ஆளுநரிடம் இந்த ஆணவ போக்கு கண்டிக்கத்தக்கது. இதுவரை பொறுத்துக்கொண்டிருந்த நாங்கள், இனியும் அவர் ஆய்வை தொடர்ந்தால் பொறுத்துக்கொள்ள முடியாது என்பதற்காக, சென்னையில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட பேரணி நடத்தினோம். கருப்புக் கொடி காண்பிப்பது ஜனநாயக நடைமுறையில் ஏற்கப்பட்டது. பிரதமராக இருந்த நேரு, இந்திரா காந்தி, அண்மையில் பிரதமர் மோடி சென்னை வந்தபோது, கருப்பு கொடி காண்பிக்கப்பட்டது. அதற்கு அச்சப்பட்டு அவர் ஆகாய மார்க்கமாக பறந்து சென்றது உங்களுக்கெல்லாம் தெரியும். அப்போதெல்லாம் திமுகவினர் கைது செய்யப்படவில்லை. இப்போது ஆளுநர் உத்தரவின்பேரில் திமுகவினர் கைது செய்யப்பட்டுள்ளது வேடிக்கையானது. ஆளுநர் தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால், பதவிக்கு லாயக்கற்றவர் என்ற அடிப்படையில் அவர் பதவி விலக வேண்டும். ஆளுநர் ஆய்வை எதிர்த்தால் மத்திய அரசு கோபத்திற்கு ஆளாக வேண்டியிருக்கும் என்பதால், முதல்வரும், அவருக்கு கீழே பணியாற்றும் துணை முதல்வர் உள்ளிட்டோரும் எதிர்ப்பதில்லை. சிபிஐ வழக்குகள், வருமான வரி வழக்குகளில் சிக்கியுள்ளதால் அரசில் இருப்பவர்களுக்கு எதிர்த்து கேட்க பயம். இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து ஸ்டாலின் உட்பட போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்த போராட்டத்தை தொடர்ந்து காவல்துறையினர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரை கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனார்.  இந்நிலையில்  பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் மு.க.ஸ்டாலின் போராட்டம் செய்தியை குறிப்பிட்டு…

‘காலையில் கைது செய்து கல்யாண மண்டபத்தில் A/C ல் வைத்து விடுதலை செய்வதை விட்டு விட்டு ஒருமுறை இவரையும் நாமக்கல் திமுக வினரை போல் ரிமாண்ட் செய்தால் எல்லாம் சரியாகிவிடும்.’ என்று தெரிவித்திருந்தார்.

இதனை தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கைதாகியிருக்கும் ஸ்டாலினை சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட்டிருப்பதாக தகவல்கள் சமூக வளைத்தலங்களில் வெளியாகி வருகிறது.  இது உண்மையாக மாறுமா என்பதும், தமிழகத்தின் சட்ட ஒழுங்கு குறித்து காவல்துறைக்கு உத்தரவு பிறப்பிக்க உத்தரவு போடுபவர்கள் யார் என்றும் மாலை தெரியும்  என எதிர்பார்கக்ப்படுகிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.