உடுமலை,
வன்கொடுமை சட்டத்தை பலபடுத்துவதற்கு தனி சட்டம் இயற்ற வேண்டுமென தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் உடுமலை ஒன்றிய மாநாடு வலியுறுத்தியுள்ளது.

தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் உடுமலை ஒன்றிய மாநாடு துணை தலைவர் எஸ். ஜெகதீசன் தலைமையில் வியாழனன்று நடைபெற்றது. இம்மாநாட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் செ. முத்துகண்ணன் துவக்கிவைத்தார். தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட செயலாளர் ஆர். குமார் , விவசாய தொழிலாளர் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் ரங்கராஜ், விவசாய சங்கத்தின் பாலதண்டபாணி, ராஜகோபால், மாதர்சங்கத்தின் சங்கீதா, வாலிபர் சங்கத்தின் லோகேஸ்வரன், தமிழ்தென்றல். சிஐடியு சங்கத்தின் ஈஸ்வரன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

இந்த மாநாட்டில் மத்திய மோடி ஆட்சி நான்காண்டில் தலித் மற்றும் சிறுபான்மை மக்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்தியுள்ளது. அதே போல் எஸ்சி – எஸ்டி சட்டத்தை சீர்குலைக்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வருதை இந்த மாநாடு கடுமையான கண்டனத்தை தெரிவித்து கொள்கிறது. உடனடியாக வன்கொடுமை சட்டத்தை பலப்படுத்த தனிச்சட்டம் இயற்ற வேண்டும். பஞ்சமி நிலங்களை மீட்டு தலித் மக்களுக்கு மக்களுக்கே வழங்க வேண்டும். துப்புரவு மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிக்கு மனிதர்களை பயன்படுத்துவதை நிறுத்தி விட்டு இயந்திரங்களை பயன்படுத்த வேண்டும். மாநகராட்சி, ஊராட்சி பகுதிகளில் துப்புரவு தொழிலாளர்களுக்கு முறையான ஊதியம் மற்றும் பாதுகாப்பு கருவிகளை வழங்க வேண்டும். அரசு துறையில் இட ஒதுக்கீடு உள்ளது போல் தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு முறையை அமல் படுத்த வேண்டும். மேலும், உழைக்கும் மக்களை அடிமை படுத்தும் அரசின் கொள்கைகளை அம்பலப்படுத்துவதும், அதற்கு எதிரான போராட்டங்களை தொடந்து நடத்துவது என்றும் மாநாட்டில்தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இம்மாநாட்டில் உடுமலை ஒன்றிய தலைவராக லோகேஸ்வரன், செயலாளராக எஸ். ஜெகதீசன், பொருளாராக ஈஸ்வரன், துணை தலைவர்களாக தெண்டபாணி, முருகபாரதி. துணை செயலாளராக ராஜகோபால், வசந்தாமணி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

குடிமங்கலம்:
தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் குடிமங்கலம் ஒன்றிய பேரவைக் கூட்டம் வெள்ளியன்று ஓம்பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது. இம்மாநாட்டில் சங்க தலைவராக ரா.ஓம்பிரகாஷ், செயலாளராக வெ.ரங்கநாதன், பொருளாளராக சி.ஜெயப்பிரகாசம் மற்றும் துணைத் தலைவராககே.பழனிச்சாமி, துணைச்செயலாளராக விஷ்ணுகுமார் உள்ளிட்ட 13பேர் கொண்ட கமிட்டி தேர்வு செய்யப்பட்டது. மாவட்டச் செயலாளர் குமார் நிறைவுரையாற்றினர்.

Leave a Reply

You must be logged in to post a comment.