தீக்கதிர்

ரூ.1 கோடி மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல்

சேலம்,
சேலத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டனர்.

சேலம் நெத்திமேடு பகுதியில் குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்துமாநகர காவல் துணை ஆணையர் சுப்புலட்சுமிதலைமையில் சம்பவ இடத்தில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் இட்டேரி சாலையில் உள்ள ஒரு குடோனில் மூட்டை, மூட்டையாக குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவை அனைத்தும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதன் மொத்த மதிப்பு ஒரு கோடிக்கும் மேல் இருக்கும் என கருதப்படுகிறது.