தில்லி,
ரயில்நிலையங்களில் செல்வி எடுக்கக் கட்டுப்பாடுகளை ரயில்வே நிர்வாகம் விதித்துள்ளது. கட்டுப்பாடுகளை மீறினால் ரூ.2000 அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
ரயில் நிலையங்களில் செல்பி எடுத்து அதை சமூக வலைதளங்களில் பகிரும் மோகம் இளைஞர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. அப்போது செல்பி எடுப்பவர்களின் அஜாக்கிரதையால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதையடுத்து ரயில் நிலையங்கள், ரயில் நிலைய வளாகம், ரயில்வே நடைமேடை, ரயில் படிக்கட்டுகள் ஆகியவற்றில் இருந்து செல்பி எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை இன்று முதல் அமலுக்கு வருகிறது. ரயில் நிலையங்களில் தடை விதிக்கப்பட்ட இடங்களில் செல்பி எடுப்பவர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது.
ரயில் நிலைய வளாகத்தில் குப்பை தொட்டியை தவிர, பிற இடங்களில் குப்பை வீசி எறிபவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. இன்று முதல் இந்த நடைமுறை அமலுக்கு வருகிறது. இதை கண்காணிக்க ரயில்வே நிர்வாகம் ஊழியர்களை நியமித்துள்ளது. மீறி செல்பி எடுத்தால், குப்பை கொட்டினால் அந்த இடத்திலேய அபராதம் வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

%d bloggers like this: