திருப்பூர்,
மாற்றுத் திறனாளிகள் சிறுதொழில் தொடங்க வங்கிக்கடன்களை தாமதமின்றி உடனடியாக வழங்க வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும்பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் திருப்பூர் தெற்கு மாநகர மாநாடு பொதுத் தொழிலாளர் சங்க அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் மாநகரத் தலைவர் ஏ.ஷகிலா, செயலாளர் பைசாஅகமது, பொருளாளர் பேச்சிமுத்து, துணைச் செயலாளர் ஜெ.செல்வி, துணைத்தலைவர் செல்வகுமார் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் ஏழு பேர் தேர்வு செய்யப்பட்டனர்.  இதில் சிறுதொழில் தொடங்க வங்கிக் கடனுக்கு விண்ணப்பித்த மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் பாரபட்சம் இல்லாமல்உடனடியாக கடன் வழங்க வேண்டும். பேருந்து பாஸ் காலதாமதம் செய்யாமல் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட செயலாளர் டி.ஜெயபால், வாலிபர் சங்க நகர தலைவர் சஞ்சீவ் ஆகியோர் இம்மாநாட்டில் உரையாற்றினர். இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.

வேலம்பாளையம் நகரம்:
வேலம்பாளையம் நகர மாற்றுத் திறனாளிகள் சங்க மாநாடு அனுப்பர்பாளையம் பாத்திரத் தொழிலாளர் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் நகரத் தலைவர் சி.ஆறுமுகம், செயலாளர் ஜார்ஜ்வர்க்கீஸ், பொருளாளர் குமரவேல், துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன், துணைச் செயலாளர் விசாலாட்சி மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் ஐந்து பேர் தேர்வுசெய்யப்பட்டனர். இதில் உதவித்தொகை ஆணை வழங்கப்பட்ட அனைவருக்கும் உடனடியாக உதவித்தொகை வழங்க வேண்டும். பெண் மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பை உத்தரவாதம் செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ன. இதில் மாவட்டத் தலைவர் பி.ராஜேஷ், மாவட்டச் செயலாளர் டி.ஜெயபால் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் வேலம்பாளையம் நகரச் செயலாளர் வி.பி.சுப்பிரமணியம் ஆகியோர் உரையாற்றினர்.

Leave A Reply

%d bloggers like this: