பாட்னா,

பீகாரில் மாம்பழம் பறிக்கச் சென்ற 10 வயது சிறுவன், சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் ககாரியா மாவட்டம் ஷெர்காஹ் கிராமத்தைச் சேர்ந்தவர் மகுனி யாதவ்(38). இவரது மகன் சத்யம் குமார்(10). இந்நிலையில் சத்யம் குமார் தனது நண்பர்களுடன் பத்ராஜா கிராமத்தில் உள்ள ஒரு தோட்டத்திற்கு சென்றுள்ளனர்.  அங்குள்ள மாமரங்களில் இருந்து, சிறுவர்கள் மாங்காய் பறித்துள்ளனர். இதனைக் கண்ட பாதுகாவலர் ராமஷிஷ் யாதவ்(43) தனது துப்பாக்கியால் சிறுவர்களை  நோக்கி, சுட்டதில் சிறுவன் சத்யம் குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.

இதைக் கண்ட மற்ற சிறுவர்கள் தப்பி ஓடினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை, சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் பாதுகாவலர் ராமஷிஷ் யாதவ் தலைமறைவாகி உள்ளார். இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: