ஹவானா:
கியூபா சென்றுள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், அங்கு, கியூபப் புரட்சித் தலைவர் பிடல் காஸ்ட்ரோ நினைவிடத்தில் மலர்வளையம் அஞ்சலி செலுத்தினார்.

மத்திய அமெரிக்க நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் மனைவி சுவிதா கோவிந்த், கிரீஸ், சுரினாம் நாட்டு பயணத்தை முடித்துக்கொண்டு வியாழனன்று கியூபா சென்றடைந்தனர். ஹவானா விமான நிலையத்தில் வந்திறங்கிய அவர்களை அந்நாட்டு அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் பிடல் காஸ்ட்ரோ நினைவிடத்திற்கு ராம்நாத் கோவிந்த், சவிதா கோவிந்த் ஆகியோர் சென்று மலர்வளையம் அஞ்சலி செலுத்தினர்.

Leave A Reply

%d bloggers like this: