ஈரோடு,
ஈரோட்டில் பள்ளி ஆசிரியர்களுக்கு வருமான வரி விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

ஈரேட்டில் வருமான வரித்துறை சார்பில் அரசு மற்றும் மாநகராட்சி, நகராட்சி பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான, வருமான வரி பிடித்தம் தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் வெள்ளியன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி தலைமை வகித்தார். இதில், திருப்பூர் மாவட்ட வருமான வரித்துறை இணை இயக்குனர் சாரதா, துணை இயக்குனர் சுரேஷ்பாபு ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர். இதில், ஒவ்வொரு பள்ளியிலும், பே டிராயிங் ஆபீசர் எனப்படும் சம்பள பட்டியல் தயாரிப்பு அதிகாரி, அப்பள்ளியில் பணி செய்யும் ஆசிரியர் உள்ளிட்ட அனைவரது சம்பளத்திலும் வருமான வரியை பிடித்தம் செய்து, சம்பள பட்டுவாடா செய்கின்றனர். வழங்கப்பட்ட சம்பளம், பிடித்தம் குறித்த தகவல் அந்தந்த ஆசிரியர் மற்றும் அதிகாரிகளுக்கு எஸ்.எம்.எஸ். மற்றும் மெயில் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

மூன்று மாத காலத்துக்கு ஒரு முறை, மாதந்தோறும் அல்லது ஆண்டுக்கு ஒரு முறை என தங்களது வருமானம் மற்றும் செலவு கணக்குகள், சேமிப்பு, கடன் பெற்ற வகைக்கான பணி பரிமாற்றம், பிற வகை வருமானங்கள் போன்றவற்றை தாக்கல் செய்கின்றனர். அவ்வாறு தாக்கல் செய்து பிடித்தம் செய்யப்பட்ட வருமான வரியில் முறையான ஆவணங்கள் உள்ள செலவுக்கான தொகையை, அவர்கள் திரும்ப பெறும் வாய்ப்பு ஏற்படும். உரிய நேரத்தில் கணக்கை தாக்கல் செய்யாதபேது, அவர்களுக்கான வருமான வரி பிடித்தத்தை, திரும்ப பெறுவதில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே, சம்பள பட்டியல் தயாரிப்பு அதிகாரி, அந்தந்த பள்ளியில் சம்பளம் பெறுபவர்களிடம், இதுபற்றி தெரிவித்து, முறையான கணக்குகளை தாக்கல் செய்ய, யோசனை தெரிவிக்க வேண்டும். வருமான வரி பிடித்தத்தில், என்னென்ன செலவுகளை மட்டும், நாம் திரும்ப பெற முடியும் என்பதையும், அவர்களுக்கு எடுத்து கூற வேண்டும் என தெரிவித்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.