மண்ணும் மணி நீரும்
கள்ளும் கனியமுதும்
என்னிடம் பறித்துவிட்டு
எதிர்த்துக் கேட்டால்…
தேசவிரோதி என்கிறாய்!

தெரியாமல் கேட்கிறேன்
தெளிவாகச் சொல்…
உன் தேசம் எங்கே…
இருக்கிறது?
உனக்கு தேசம் ஒன்றும்
இருக்கிறதா?

-சூர்யா, கோவை.

Leave a Reply

You must be logged in to post a comment.