“சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளால் நிகழ்ந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விசாரிக்க ” – என விசாரணை கமிஷனுக்கான அரசாணை சொல்கிறது. ஆக, சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளால் தான் துப்பாக்கி சூடு நடந்ததாக அரசு முடிவு செய்துவிட்டு ஒரு நபர் கமிஷனை அமைத்துள்ளது. இது தவறு. எனவே இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்பது நமது வழக்கின் முதல் வாத கருத்து. நமது இக்கருத்தை டிவிஷன் பெஞ்ச் ஆமோதித்து அரசு வழக்கறிஞரிடம் சுட்டிக்காட்டியது. இவ்விஷயத்தில் அரசு தலைமை வழக்கறிஞரின் இன்றைய வாதத்தை நீதிமன்றம் ஏற்கவில்லை. எனவே இதுகுறித்து அரசிடம் அறிவுரை பெற்று தெரிவிப்பதாக அவர் கோரியதையடுத்து, நமது வழக்கை வருகிற 27-ம் தேதிக்கு நீதிமன்றம் அரசின் பதிலுக்காக ஒத்திவைத்துள்ளது.

Shaji Chellan Lawyer

Leave a Reply

You must be logged in to post a comment.