திருப்பூர்,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22 ஆவது அகில இந்திய மாநாட்டு முடிவுகளை விளக்கி திருப்பூரில் சிறப்புப் பேரவைக் கூட்டம் நடைபெற்றது.

திருப்பூர் தியாகி பழனிசாமி நிலையத்தில் வெள்ளியன்று மாலை நடைபெற்ற இக்கூட்டத்துக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.மூர்த்தி தலைமை வகித்தார். இதில் அகில இந்திய மாநாட்டு அரசியல் தீர்மானத்தை விளக்கி மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன், அரசியல் ஸ்தாபன முடிவுகளை விளக்கி மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் ஆகியோர் உரையாற்றினர். இக்கூட்டத்தில் திருப்பூர் ஐந்து இடைக்குழு பகுதிகளை சார்ந்த இடைக்குழு உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள் பங்கேற்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.