தீக்கதிர்

குரங்கு அருவியில் வெள்ளம்: சுற்றுலா பயணிகள் செல்ல தடை

பொள்ளாச்சி,
பொள்ளாச்சி குரங்கு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறையினர் தடைவிதித்துள்ளனர்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த ஆழியார் குரங்கு அருவி பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி, அருவியில் குளிக்க தொடர்ந்து 2 ஆவது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இங்கு வந்தசுற்றுலாப்பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.