சென்னை:
குட்கா ஊழல் வழக்கில் விசாரணையைத் தொடங்குவதற்காக முறைகேடு நடைபெற்ற காலத்தில் பணியாற்றிய உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பெயர்ப்பட்டியலை சிபிஐ அதிகாரிகள் பெற்றுள்ளனர்.

சென்னை செங்குன்றத்தில் உள்ள கிடங்குகளில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையின்போது தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. குட்கா விற்பனையை அனுமதிப்பதற்காக அரசின் உயர் பதவிகளில் இருப்பவர்கள் முதல் அதிகாரிகள் வரை பலருக்கு லஞ்சமாகப் பணம் கொடுக்கப்பட்டது தொடர்பான குறிப்பேட்டைக் கைப்பற்றினர்.

இது தொடர்பாகத் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரித்து வந்த நிலையில், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் தில்லியில் இருந்து வந்துள்ள சிபிஐ அதிகாரிகள் குட்கா ஊழல் நடைபெற்றதாகக் கூறப்படும் காலக்கட்டத்தில் உணவுப் பாதுகாப்புத் துறையில் பணியாற்றிய அதிகாரிகளின் பெயர்ப்பட்டியலைப் பெற்றுள்ளனர்.

இதையடுத்து வழக்குத் தொடர்பான சான்றுகள் அனைத்தையும் திரட்டிவிட்டு விசாரணையைத் தொடங்க சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: