சிவகங்கை ஜூன்22-

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதி கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர்க்காப்பீட்டுத் தொகை வழங்க  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிரச்சார பொதுககூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இளையான்குடியில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரச்சார பொதுக்கூட்டம் ஒன்றிய செயலாளர் அழகர்சாமி தலைமையில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ராஜீ,பரிசுத்தம்மங்களசாமி ஆகியோர் முன்னிலையில் நடந்தது. இக்கூட்டத்தில் மாநிலக்குழு உறுப்பினர் சின்னத்துரை,மாவட்ட செயலாளர் கந்தசாமி,மாவட்ட செயற்குழு உறுப்பினர் கருப்புச்சாமி,ஒன்றியக்குழு உறுப்பினர்கள் முருகன், பிரவின் பிரதாப், நாகசாமி, சந்தியாகு,
தமிழரசன் ஆகியோர் பேசினார்கள். மலையரசு நன்றி கூறினார். இந்த பொதுக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சிவகங்கை மாவட்ட ஆதிதிராவிட நலத்துறையால் நாகநாதபுரம், முனைவென்றி, அறிவொளி நகர் ஆகிய பகுதியில் தலித் மக்களுக்கு வீட்டுமனைப்பட்டா கொடுக்கப்பட்டது. வீட்டுமனைப்பட்டா கொடுத்து பத்து வருடத்திற்கு மேலாகிறது. இந்த வீட்டுமனைகளை நில அளவை செய்து ஒப்படைக்கவில்லை.ஒப்படைக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி முற்றுகை போராட்டம் நடத்தியது.போராட்டத்தில் வட்டாட்சியர் அலுவலகத்தில் உடன்பாடு ஏற்பட்டது. 25.04.2018 க்குள் நில அளவை செய்து தருவதாக அதிகாரிகள் ஒத்துக்கொண்டு
கைப்யொப்பமிட்டு எழுதிக் கொடுத்தார்கள். அதிகாரிகள் எழுதிக் கொடுத்தப்படி செயல்படுத்தவில்லை. உடன் செயல்படுத்தக் கோரி  குடும்பங்களோடு தாலுகா அலுவலகத்தில் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட முடிவெடுத்துள்ளனர்.
இளையான்குடி கீழாயூர் காலனியில் உள்ள 285 வீடுகள் உள்ளன.40 வருடமாக குடியிருந்து வருகின்றனர்.இவர்களுக்கு வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்ததை திரும்ப பெற வேண்டும்.
இளையான்குடி கண்மாய் நீர் வழிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு த்திட்டத்தில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும்
திருவள்ளுவர் குரூப் கொடிமங்கலம் விவசாயிகள் உழவடை செய்து வருகிற நஞ்சை,புஞ்சை நிலங்களுக்கு போடப்பட்டுள்ள தடையாணையை ரத்து செய்ய வேண்டும்.
ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Leave a Reply

You must be logged in to post a comment.