அகமதாபாத்:
குஜராத்தின் ஆரவல்லி மலைத்தொடரில் உள்ள தாரங்கா மலைப் பகுதியில் இந்தியத் தொல்லியல் துறையினர் மேற்கொண்ட ஆய்வில் புத்த சமய ஸ்தூபியைக் கண்டுபிடித்துள்ளனர்.குஜராத்தில் ஆரவல்லி மாவட்டத்தில் உள்ள தேவ்நீ மோரியில் கி.பி. 3-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, பவுத்த சமய பழங்காலப் பொருட்களும் ஸ்தூபியும் புத்த விஹார்களும் நீண்ட காலமாக இருந்து வருகின்றன.

இந்த நிலையில், இந்தியத் தொல்லியல் துறையினர் தொடர்ந்து இந்தப் பகுதியில் ஆய்வுகளை மேற்கொண்டிருந்த நிலையில் தற்போது, ஸ்தூபி, மண் பாண்டம், கலைப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது ‘க்ஷத்திரா’ காலத்தைச் சேர்ந்தவை என்று கூறப்படுகிறது.
இங்கு தற்போது ஆய்வுப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு உள்ளன. சுமார் 8 மீட்டர் விட்டம் கொண்ட சுட்டச் செங்கற்களால் ஆனக் கட்டடம் ஒன்று நான்கு படிகளுடன் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக தொல்லியல் ஆய்வின் துணைக் கண்காணிப்பாளர் டாக்டர் அபிஜித் அம்பேகர் தெரிவித்துள்ளார்.குஜராத் மிகமுக்கியமான பவுத்த தலம் என்பதை, சமீபத்திய இந்தக் கண்டுபிடிப்புகள் உறுதிப்படுத்தியுள்ளன.சமீபத்தில் 50 மீட்டர் நீளம் கொண்ட கி.மு. 5-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கட்டடம் ஒன்றைப் பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த ஊரான வாத் நகரில் தொல்லியல் துறையினர் கண்டுபிடித்தனர். வாத் நகரில் இருந்து தாரங்கா மலைப் பகுதியானது 38. கி.மீ பரப்பளவைக் கொண்டதாகும். மேலும் மாநிலத் தொல்பொருள் துறையினர், வாத் நகரில் பவுத்த கோயில் ஒன்றையும் அண்மையில் கண்டுபிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

%d bloggers like this: