போபால்:
சில நாட்களுக்கு முன்பு, பாஜக ஆளும் குஜராத்தில் தலித் மணமகன் ஒருவர் மாப்பிள்ளை ஊர்வலத்தின்போது, குதிரையிலிருந்து இறங்கிவிடப்பட்டு அவமானப்படுத்தப்பட்டார்.

இந்நிலையில், பாஜக ஆட்சியிலிருக்கும் மற்றொரு மாநிலமான, மத்தியப் பிரதேசத்திலும் மணப்பெண் வீட்டுக்கு குதிரையில் சென்ற தலித் மணமகன், சாதி ஆதிக்க வெறியர்களால், வலுக்கட்டயமாக கீழே இறக்கி விடப்பட்டு, தாக்கப்பட்டுள்ளார்.வட மாநிலங்களில் திருமணத்தின் போது, மாப்பிள்ளை குதிரையில் அமர்ந்து மணப்பெண் வீட்டுக்கு ஊர்வலமாக செல்வது வழக்கமாக உள்ளது. அந்த அடிப்படையில், மத்தியப்பிரதேச மாநிலம் சத்தார்பூர் மாவட்டம் பதமால்கர் கிராமத்தில் அசோக் அகிர்வார், மணப்பெண் வீட்டுக்கு குதிரையில் ஊர்வலமாக சென்றுள்ளார்.

அப்போது அங்குள்ள ‘தாகூர்’ பிரிவைச் சேர்ந்த சாதி ஆதிக்க வெறியர்கள், ‘தலித் சமூகத்தை சேர்ந்தவர் குதிரையில் ஊர்வலம் செல்லக்கூடாது’ என்று கூறி அவரை வலுக்கட்டாயமாக கீழே இறக்கி விட்டு தாக்கியதுடன் மணப்பெண் வீட்டுக்கு நடந்து செல்ல வைத்துள்ளனர். தங்கள் பிரிவைச் சேர்ந்த ஆண்களுடன் கைகோர்த்துக் கொண்ட சாதி ஆதிக்கப் பிரிவைச் சேர்ந்த பெண்களும், இந்த சம்பவத்தில் மணமகன் ஊர்வலத்தில் வந்தவர்கள் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.தற்போது மணமகனுக்கு இழைக்கப்பட்ட தீண்டாமைக் கொடுமை தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

Leave A Reply

%d bloggers like this: