போபால்
மத்திய பிரதேச மாநிலத்தில் ஜீப் மீது டிராக்டர் மோதி விபத்துக்குள்ளனது. இந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் மொரேனா நகரில் அதிகாலை ஆட்களை ஏற்றிச் சென்ற ட்ராக்டர், முன்னே சென்று கொண்டிருந்த ஜீப் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 12 பேர் உயிரிழந்தனர். மேலும் 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply