தேசத்தின் வளர்ச்சியில் யாருக்கும் இளைத்தவர்கள் அல்ல இடதுசாரிகள்.

வளர்ச்சி என்ற கோஷத்தை கூறிக்கொண்டே இந்தியாவை படுகுழிக்குள் தள்ளிய பாஜக அரசு, நீண்ட இழுபறிக்கு பின் மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனையை அறிவித்துள்ளது. மதுரையில் எய்ம்ஸ் வரக்கூடாது என்பதில் தீவிரமாக இருந்த கட்சி பாஜக தான். இத்தனை தாமதத்திற்கும் அக்கட்சி தான் காரணம்.

மதுரையில் எய்ம்ஸ் அமைக்க மூன்று இடங்கள் தேர்வு செய்யப்பட்டு மத்திய அரசின் பார்வைக்கு அனுப்பப்பட்டது. ஆனால், இந்த திட்டத்தை சேலம், தஞ்சாவூர் உள்ளிட்ட இடங்களுக்கு கொண்டு போக வேண்டும் என்ற கோரிக்கை ஆளுங்கட்சி தரப்பில் இருந்து எழுந்த போது பேசாமடந்தையாக இருந்து விட்டு தற்போது, தங்களால் தான் எய்ம்ஸ் வந்தது போல பாஜக தலைவர்கள் பேசுகிறார்கள்.

தமிழகத்தில் எய்ம்ஸ் என்று பேசப்பட்ட போது அதை தென் மாவட்டத்தில் தான் குறிப்பாக மதுரையில் தான் அதை அமைக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் குரல்கொடுத்தவர் பி.மோகன் எம்பி தான்.

தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தலைவர்கள் பலமுறை இவ்விஷயமாக, பி.மோகன் எம்.பியுடன் மத்திய அமைச்சர்களைச் சந்தித்துள்ளனர்.இதற்கான ஆவணங்களும், ஆதாரங்களும் உள்ளன. மதுரையில் 1500 கோடி ரூபாய் சூப்பர் ஸ்பெஷலிட்டி மருத்துவமனை வரவேண்டும் என்று தொடர்ந்து செயல்பட்டவர் பி.மோகன் எம்.பி தான். இதற்கான இயக்கங்களை முன்னெடுத்ததும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தான்.

மதுரையில் 10 ஆண்டுகளாக பி.மோகன் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போது தான் நாடாளுமன்ற உறுப்பினர் நிதி இருந்ததே தெரிய வந்தது. அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டன. புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டன. விமானம் மற்றும், ரயில்வே துறையில் மதுரை வளர்ச்சியடைந்ததும் இவர்கள் காலத்தில் தான்.

மதுரையில் மத்திய அரசின் 2 கேந்திராவித்யாலயா பள்ளிகள் பி.மோகன் எம்.பி முயற்சியால் தான் அமைந்தன. மதுரையில் தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிலையம் அமைக்கவும் அவர் தான் காரணமாக இருந்தார்.

தனது தொகுதி மேம்பாட்டு நிதியான 20 கோடி ரூபாயை கல்வி, குடிநீர், சுகாதாரம், சமுதாயக்கூடம் ஆகிய பணிகளுக்கு செலவிட்டார். குறிப்பாக, ஏழை, எளிய மக்களின் உயிர்காக்கும். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 1.50 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்த ஒரே மக்களவை உறுப்பினர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த எம்.பி மோகன் மட்டும் தான்.

பிரம்மாண்டமாய் எழுந்து நிற்கும் கட்டிடம் எழும்ப காரணமான அடிக்கல் யாருக்கும் தெரிவதில்லை. ஆனால், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையின் அடிக்கல் தோழர். பி.மோகன் தான் என்பது மதுரை மக்களுக்கு நன்றாக தெரியும்.

Leave A Reply

%d bloggers like this: