கோவை,
பஞ்சாலைகளில் உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதால் செலவினத்தை கட்டுப்படுத்த பஞ்சாலைகளில் பயன்படுத்தும் பெட்ரோல், டீசல் மற்றும் மின்சாரம் ஆகியவற்றை ஜி.எஸ்.டி., வரிக்குள் கொண்டு வரவேண்டம் என பஞ்சாலை சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கமான சீமா மற்றும் பருத்தி ஜவுளி ஏற்றுமதி கூட்டமைப்பான டெக்ஸ்புரோசில் ஆகிய சங்கங்களின் ஆலோசனை கூட்டம் புதனன்று கோவை சீமா அரங்கில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து டெக்ஸ்புரோசில் அமைப்பின் தலைவர் உஜ்வால் லகோதி செய்தியாளர்களிடம் கூறுகையில், கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சீனாவிற்கான பருத்தி நூல் ஏற்றுமதி குறைந்துள்ளது. வியட்நாமில் இருந்து சீனாவில் இறக்குமதியாகும் பருத்தி நூலின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதே இதற்குகாரணம். வியட்நாமில் இருந்து சீனாவிற்கு ஏற்றுமதி வரிகள் இல்லை என்பதால் இந்த நிலை உருவாகியுள்ளது. இருந்தபோதும், இந்திய பருத்தி நூலின் தரம் காரணமாகத் தொடர்ந்து ஏற்றுமதி இருந்து வருகிறது. கடந்த ஆண்டில் மட்டும் இந்தியாவில் 60 ஆயிரம் புதிய ஸ்பிண்டில்கள் நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ளது. பழைய ஸ்பிண்டில்கள் மாற்றப்பட்டு வருவதால், இந்தியாவில் பருத்தி உற்பத்தி அதிகரித்த போதும், நூல் உற்பத்தி அதிகரிக்கவில்லை.

மேலும், பஞ்சாலைகள் பயன்படுத்தும் பெட்ரோல், டீசல் மற்றும் மின்சாரம் ஆகியவற்றிற்கு இதுவரை ஜி.எஸ்.டி வரி விதிக்கப்படவில்லை. எனவே, லாபம் குறைவதை கருத்தில் கொண்டு, இவற்றை ஜி.எஸ்.டி வரிக்குள் கொண்டு வந்து பஞ்சாலைகளுக்கு வரி வருமானம் அளிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கலப்பட பஞ்சை கண்டறிய அரசு கண்காணிப்பு குழுவை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக பஞ்சாலை சங்கங்கள் அளித்துள்ள கோரிக்கைகள் குறித்து மத்திய ஜவுளித்துறை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave A Reply

%d bloggers like this: