திருப்பூர்,
திருப்பூரில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலை பள்ளியில் வியாழனன்று யோகா நிகழ்ச்சி நடைபெற்றது.

 திருப்பூரில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு உலக சமுதாய சேவா சங்கம் சார்பில் யோகா பயிற்சி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மாணவ மாணவிகள், ஸ்கை யோகா ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட ஐநூறுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.  உலக சமுதாய சேவா சங்க துணை தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். திருப்பூர் மண்டல தலைவர் கந்தசாமி வரவேற்றார். உலக சமுதாய சேவா சங்க துணை தலைவர் நாகராஜன் கொடியேற்றி வைத்தார். ஸ்கை குழுமம் நிர்வாக இயக்குனர் சுந்தர்ராஜன் யோகா பயிற்சியை துவக்கி வைத்தார். இதில் காவல் துறை மேற்கு மண்டல தலைவர் பாரி சிறப்புரையாற்றினார். நிறைவாக, உலக சமுதாய சேவா சங்க திருப்பூர் மண்டல செயலாளர் பழனிசாமி நன்றி கூறினார்.

உடுமலை:
இதேபோல்,உடுமலை அரசு கலைக்கல்லூரியில் வளாகத்தில் மாணவ மாணவியர்கள் யோகா பயிற்சி மேற்கொண்டார்கள். இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் க. சித்ரா தலைமை தாங்கினார். தேசிய மாணவர்படை அதிகாரி இராமலிங்கம் வரவேற்றார்.

Leave A Reply

%d bloggers like this: